கோவையில் இருந்து தூத்துக்குடி நோக்கி ஆம்னி பேருந்து சுமார் 30 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது அப்போது தனக்கன்குளம் அருகில் நான்கு வழிச்சாலையில் செல்லும் போது திண்டுக்கல்லில் இருந்து விருதுநகர் நோக்கி சென்ற லாரி பழுதாகி சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தது.
அப்போது அதே சாலையில் அதி வேகமாக வந்த ஆம்னி பேருந்து நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் மோதி சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பு வேலியை உடைத்து கொண்டு பள்ளத்தில் உருண்டது.
இதில் பேருந்தில் பயணம் செய்த 10 க்கும் மேற்ப்பட்டோர் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த டிரைவர் கோவில்பட்டியை சேர்ந்த கருப்பசாமி (42) உடுமலைப்பேட்டையை சேர்ந்த ரங்கம்மாள்(63), கோவையை சேர்ந்த சந்திரா(63), வளர்மதி(44) சாத்தான்குளத்தை சேர்ந்த லிங்கம்(64), தூத்துக்குடி யை சேர்ந்த சோமசுந்தரம்(54),ஜெகன்(23) ஆகியோர் படுகாயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் லாரி பலத்த சேதமடைந்தது. விபத்து குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.