மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தனது மனைவி மற்றும் வெண்ணிலா(வயது 2) மற்றும் ஒரு மாத கைக்குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது தோப்பூர் நான்கு வழி சாலையில் இருந்து சர்வீஸ் ரோட்டிற்கு மாறியபொழுது அதே சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த மற்றொருவர் சர்வீஸ் ரோட்டிற்கு மாறியபொழுது நிலை தடுமாறி ராஜ்குமார் குடும்பத்துடன் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் கார்த்திகை செல்வி மற்றும் இரு குழந்தைகளுடன் கீழே விழுந்ததில் சர்வீஸ் ரோட்டில் வந்துகொண்டிருந்த கேஸ் சிலிண்டர் லாரி டயரில் தலை நசுங்கி கார்த்திகைச்செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும் இரு குழந்தைகள் மற்றும் ராஜ்குமார் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.கார்த்திகை செல்வியின் உடல் உடல்கூறு பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்க்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.