மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே சோளங்குருணி கிராமத்தைச் சேர்ந்த டீக்கடைக்காரர் ரவி சந்திரன் (வயது 51) கிராமம் தோறும் “தனி ஒருவனாக ” கொரோனா தொற்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வலையங்குளம் அருகே உள்ளது சோளங்குருணி கிராமம் டீக்கடை நடத்தி வருபவர் ரவிச்சந்திரன் இவருக்கு ஒரு மனைவியும் ,ஒரு மகன், மகள் உள்ளனர்.
கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரான தொற்று ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரவிசந்திரன் “தனி ஒருவனாக ” தனது ஆம்னி வேனில் மைக் மூலம் கிராமம் தோறும் கொரான விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தற்போதும் கொரான தொற்று குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
தனது டீக்கடையில் வேலை செய்துகொண்டே தனது சொந்த மாருதி வேனில் ஸ்பீக்கர் கட்டி கிராமம் தோறும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி மாஸ்க் மற்றும் சானிடைசர் வழங்கி பொதுமக்களிடையே பாதுகாப்பு குறித்து அறிவித்து வருகிறார்.
ஐந்தாவது வரை படித்துள்ள 51 வயதான ரவிச்சந்திரன் திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் உள்ள வலையங்குளம் பெருங்குடி, , சாமநத்தம்,சிந்தாமணி, பனையூர், நெடுங்குளம், குதிரை குத்தி, எலியார்பத்தி, ஈச்சனேரி, பெரியார் நகர் உள்ளிட்ட 11 கிராமப்புற பகுதிகளில் காலை, மாலை இருவேளைகளிலும் தனது மாருதி வேனில் ஸ்பீக்கர் கட்டிக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதிதாக பாதுகாப்பாக இருக்கவும் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் சமூக இடைவெளி விட்டு செல்லவும் அறிவுறுத்துகிறார். மேலும் தனது சொந்த செலவில் மாஸ்க் வாங்கி கிராமம் தோறும் விநியோகம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது சொந்த செலவில் கொரனவிற்காக இது வரை ரூபாய் 50 ஆயிரம் பணம் செலவழித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். இதற்காக திருமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் வினோதினி இவரை பாராட்டி கேடயம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.