கள்ளசாரயமோ, நல்ல சாராயமோ குடியை விடுங்கள் குடிப்பழக்கம் வீட்டுக்கும் கேடு நாடுக்கும் கேடு. பிளாஸ்டிக் பொருட்களை தவிருங்கள் மஞ்சள்பை உபயோகியுங்கள் – சோளங்குருணி கிராமத்து சமூக ஆர்வலர் ரவிசந்திரன்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சோளங்குருணி கிராமத்தில் பள்ளி மாணவர்களுக்கு நோட்புக் வழங்கும் விழா நடை பெற்றது.
விழாவில் சோளங்குருணி பற்றி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா, முன்னிலையில் கோளங்குருணி சமுக ஆர்வலர் ரவிசந்திரன் பள்ளியில் பயிலும் 187 மாணவர்களுக்கு நோட் புக், மற்றும் பள்ளிக்கு ரேடியோ உபகரணங்கள் வழங்க ரூபாய் 45 ஆயிரம் மதிப்பில் பொருட்கள் வழங்கினார்.

நோட்புக் வழங்கும் நிகழ்வில் சமுக ஆர்வலர் ரவிச்சந்திரன் மாணவர்களிடம் கூறும்போது “கள்ளச்சாராயமோ , நல்ல சாராயமோ குடியை விடுங்கள். குடிப்பழக்கம வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு, உங்கள் பெற்றோருக்கு அறிவுரை கூறுங்கள்,

இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது தலைகவசம் அணிய சொல்லுங்கள், காரில் செல்லும்போது சீட்பெல்ட் அணிய சொல்லுங்கள்.

உங்கள் அம்மா. கடைக்கு செல்லும் போது மஞ்சள் பை கொண்டு செல்லுங்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருளை தவிருங்கள் என மாணவர்கள் மூலம் சுற்றுச்சூழலையும், சமூக அக்கறையுடன் விழிப்புணர்வு மாணவர்கள் மூலம் மக்களிடையே பரவ செய்யும் ரவிசந்திரனின் செயல்பாடுகள் பாராட்டதக்கது.

செய்தியாளர் வி காளமேகம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!