சபரிமலைக்கு அனுமதி இல்லை… தலையில் நெய் சுமந்து வந்த பெண்கள்!

சபரிமலைக்கு அனுமதி இல்லை… தலையில் நெய் சுமந்து வந்த பெண்கள்!

ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்திற்கு பாதயாத்திரையாக அபிஷேக நெய் கொண்டு சென்ற பெண் பக்தர்கள்… கேட்டது கிடைக்க வேண்டுதல்களுடன் விரதம் இருந்து பக்தி பாடல்கள் பாடி பாதயாத்திரை…

ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் ஸ்ரீவல்லபை ஐயப்பன் ஆலயத்தில் வருகின்ற 27 ஆம் தேதி நடைபெற உள்ள மண்டல பூஜை மகா அபிஷேகத்திற்கு ராமநாதபுரத்தில் இருந்து பக்தர்கள் வேண்டுதல் உடன் விரதம் இருந்து அபிஷேக நெய் சுமந்து கொண்டு பாத யாத்திரை சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம்
ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் பல வருடங்களாக இராமநாதபுரத்தில் இருந்து வேண்டுதல்களுடன் விரதம் இருந்து பாத யாத்திரையாக ஸ்ரீஐயப்ப பஜனைப் பாடல்கள் பாடி, ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மண்டல பூஜைக்கு அபிஷேக நெய் கொண்டு வருவது வழக்கம். இந்த ஆண்டு ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையை முன்னிட்டு பக்தர்கள் மண்டல பூஜை அபிஷேகத்திற்கு காலை சரியாக 5:30 மணிக்கு இராமநாதபுரம் ஸ்ரீமல்லம்மாள் காளியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஆன்மீகப் பெருமக்கள் பாதயாத்திரையாக அபிஷேக நெய் சுமந்து கொண்டு ஊர்வலமாக வல்லபை ஐயப்பன் கோயிலை நோக்கி நடந்து சென்றனர்.

இந்த பாதயாத்திரை ஊர்வலத்தில் ஆன்மீகப் பெருமக்கள் கலந்து கொண்டு ஐயப்பன் பஜனை பாடல்களை பாடிக்கொண்டு சென்றனர். வழியில் பல்வேறு இடங்களில் பாதயாத்திரையாக நெய் சுமந்து வந்த பக்தர்களுக்கு ஆங்காங்கே குடிநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப் பட்டது. இந்த பாதயாத்திரை பட்டிணம்காத்தான், குயவன்குடி, வாலாந்தரவை, வழுதூர், தெற்கு காட்டூர் கிராமத்தின் வழியாக சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் நடந்து சென்று ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தை வந்தடைந்தனர்… பின்னர் ஐயப்பன் கோயிலில் அபிஷேக நெய்யை தலைமை குருசாமி மோகன் சாமியிடம் வழங்கி ஆசீர்வாதம் பெற்றனர்.

இந்தப் பாதயாத்திரை நெய் கொண்டு செல்வதன் சிறப்பு என்னவென்றால், 41 நாட்கள் ஆண் பக்தர்கள் விரதம் இருந்து சபரிமலையில் இருக்கின்ற ஐயப்பனுக்கு நெய் கொண்டு சென்று அபிஷேகம் செய்து வழிபட்டு வரக்கூடிய நிலையில், பெண்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு நெய் கொண்டு செல்ல முடியாத காரணத்தினால், சபரிமலைக்கு மாலை இட்டு செல்லக்கூடிய ஆண் பக்தர்களின் குடும்பத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த பாதயாத்திரையில் கலந்து கொண்டு அவர்கள் கையால் கொண்டு வந்து தரக்கூடிய நெய்யினால் மண்டல பூஜை அன்று ஸ்ரீ வல்லபை ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுவது என்பது குறிப்பிடத்தக்கது…

மண்டல பூஜை ஏற்பாடுகளை ஸ்ரீ வல்லபை ஐயப்பா சேவை நிலையம் அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!