அரிய நிகழ்வு: சூரியனை சுற்றி வட்ட வடிவ வானவில் போன்ற வளையம் | புதிய அனுபவத்தை ரசித்த மதுரை மக்கள்!
திடீரென வானில் சூரியனை சுற்றி கருமை நிறம் சூழ்ந்து வானவில் தோன்றிய நிகழ்வு மதுரையில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இன்று மதியம் சுமார் 12.30 மணிக்கு திடீரென சூரியனை சுற்றி கருமை நிறம் சூழ்ந்து இருப்பது போன்ற ஒளிவட்டதுடன் வானவில் தோன்றியது. மதுரை மக்களுக்கு ஆச்சர்யத்தை உண்டாக்கியது.
வானில் தோன்றிய இந்நிகழ்வை மதுரை உட்பட சுற்றுப்பகுதியில் பல இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.சுமார் அரைமணி நேரத்துக்கு மேலாக சூரியனை சுற்றி இந்த ஒளிவட்டம் தோன்றியது. வானவில் போன்று அழகாக காட்சி அளித்ததால் பொதுமக்கள் பலரும் தங்களது செல்போனில் சூரிய ஒளி வட்டத்தை படம் பிடித்தனர். இன்னும் சிலர் சூரியனை சுற்றியுள்ள வானவிலுடன் செல்பி எடுத்தது கொண்டனர்.
சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போன்ற நிகழ்வுகளை சாதாரணமாக நம்மால் பார்க்க இயலாது. அதே போல் கிரகணத்தை நம்மால் நேரடியாக கண்ணால் பார்க்க முடியாது ஆனால், இந்த வட்டத்தின் அளவு மிகவும் அகலமாக இருந்ததால் மக்களால் நேரடியாக கண்களால் பார்க்க முடிந்தது. இந்த மாதிரியான ஒளிவட்டம் தோன்றியதற்கான காரணம் அறிவியில் ரீதியாக இன்னும் தகவல் தெரியவில்லை.
சுமார் அரை மணிநேரத்துக்கு மேலாக தோன்றிய இந்த வட்டவடிவ வானவில் இந்த நிமிடம் வரை தெரிந்துகொண்டு தான் உள்ளது. இந்நிகழ்வு மதுரை பொது மக்களளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.