விஜய் ரசிகர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கிய நாம் தமிழர் கட்சியினர்.

Advertising

“திரைக் கவர்ச்சி அரசியல்” குறித்து ‘நடிகர் விஜயும் அரசியலுக்கு வருவார் என அவரது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் சொல்லியிருக்கிறாரே?’ என சீமானிடம் செய்தியாளர்கள் கேட்க ‘சட்டமன்ற தேர்தலில் ரஜினி, கமலையும் அடிக்கிற அடியில்  இனி எந்த நடிகருக்கும் கட்சி ஆரம்பிக்கிற எண்ணம் வரக் கூடாது’ என சீமான் சொல்லியிருந்தார். 

நேற்றைய தினம் விமர்சனங்களை முன்வைத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பற்றி கும்பகோணத்தில் தவறான வாசகங்களோடு பதாகை அடித்திருந்த கௌதம், சபரி ஆகிய சில விஜய் ரசிகர்கள், கும்பகோணத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் மணி செந்தில் அவர்களின் அலுவலகத்திற்கு நேரில் சென்று தவறான புரிதல், தவறான செய்கைகளுக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் தங்களின் அனைத்து பதிவுகளையும் நீக்கிவிட்டதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் விஜய் ரசிகர்களின் இணையதள பொறுப்பாளரான நந்தா என்பவரும் இதுகுறித்து வருத்தம் தெரிவித்து இனி இதுபோன்ற சம்பவம் நிகழாது என உறுதி அளித்துள்ளனர்.

இதனால் இவர்களின் மேல் மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இளைஞர்களின் எதிர்காலம் கருதி கடுமையாக எச்சரித்து அனுப்பபட்டோம் என நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்தனர்.

வருத்தம் தெரிவித்த விஜய் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கி நாம் தமிழர் கட்சியின் சார்பில் அவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போது நாம் தமிழர் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் ராஜ்குமார் ராமதாஸ்,நாம் தமிழர் கட்சியின் குடந்தை சட்டமன்ற தொகுதி செயலாளர் மற்றும் வேட்பாளர் வழக்கறிஞர் மோ.ஆனந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.

இது போன்ற செய்திகளை உடனுக்குடன் பெற கீழே உள்ள வாட்ஸ் அப் படத்தை கிளிக் செய்து குழுவில் இணையவும்.

Leave a Reply

error: Content is protected !!