போலி ஆவணம் மூலம் கடவுச்சீட்டில் முறைகேடு: மலேசியாவிலிருந்து வந்த 2 போ் கைது
கடவுச்சீட்டில் முறைகேடு: மலேசியாவிலிருந்து வந்த 2 போ் கைது கடவுச்சீட்டில் முறைகேடு செய்து மலேசியாவிலிருந்து வந்த 2 பயணிகளை திருச்சி விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மலேசியா தலைநகா் கோலாலம்பூரிலிருந்து பேட்டிக் ஏா்வேஸ் விமானம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திருச்சி பன்னாட்டு விமான நிலையம் வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளின் கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்களை, குடியேற்றப் பிரிவினா் வழக்கமான சோதனைகளுக்கு உள்ளாக்கினா். இதில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சிலம்பணி பகுதியை சோ்ந்த எம். கயா்கண்ணன்…
