திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: அமைச்சர் நிர்மல் குமார் வீடு அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!
மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் அமைச்சர் நிர்மல் குமார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக தகவல் வெளியானதால் அவரது வீடு, அலுவலகத்துக்கு 40-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கார்த்திகை தீபம் ஏற்றவில்லை. இது பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு மதுரை ஆட்சியர், திருப்பரங்குன்றம் எம்எல்ஏவும், அமைச்சருமான நிர்மல் குமார்…
