குற்றங்கள் குறைய, விவசாயம் செழிக்க,காவல்துறை & பொதுப்பணித்துறையினர் காவடி ஏந்தி பவனி.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் குற்றங்கள் குறைந்து மக்கள் அமைதியாக வாழவும் நீர்வளம் செழித்து விவசாயம் தழைத்தோங்க வேண்டியும் காவல்துறை மற்றும் பொதுப்பணி துறையினர் விரதமிருந்து முருகனுக்கு காவடி ஏந்தி நேர்த்தி கடன் செய்யும் பாரம்பரிய நிகழ்வு நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சியின் கீழ் இருந்தபோது ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையன்று பல்வேறு முக்கிய சடங்குகள் நடைபெறும். அதன் ஒரு பகுதியாக குற்றங்கள் குறைந்து மக்கள் அமைதியாக வாழவும், நீர்வளம் செழித்து விவசாயம்…
