ஊராட்சி மன்றத் தலைவர் வெட்டி கொலை..!
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம், அகரம் ஊராட்சி மன்றத்தில் தலைவராக இருந்து வந்தவர் ஈசாக்கு மகன் பொன்சீலன்(45). அவர், தூத்துக்குடி அருகே முத்தையாபுரம்,வீரபாண்டிநகரில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவரது மனைவி எஸ்தர்மெர்லின். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளன. அதிமுக பிரமுகரான இவர், தற்போது நடந்து வரும் சி.எஸ்.ஐ தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல தேர்தலில் போட்டியிட்டு பெருமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் இன்று அகரம் ஊரில் கோவில் கொடைவிழா நடந்தது. கோவில் கொடைவிழாவிற்கு சென்ற பஞ்சாயத்து தலைவர்…
