இந்திய ராணுவ வீரர்களில் பாதிக்கு மேல் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளதாக ஆய்வில் தகவல்.
13 லட்சம் பேர் பணியாற்றும் இந்திய இராணுவத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் “கடுமையான மன அழுத்தத்தில்” இருப்பதாக புதிய ஆய்வின் தகவல்கள் தெரிவிக்கிறது. ராணுவத்தில் ஒவ்வொரு ஆண்டும் எதிரிகளுடன் சண்டை மற்றும் விரும்பத்தகாத நிகழ்வுகள் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளை விடவும், தற்கொலைகள் காரணமாக அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்த தரவுகள் பாதுகாப்பு சிந்தனைக் குழுவான யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூஷன் ஆப் இந்தியாவுக்கு சேவை செய்யும் கர்னல் நடத்திய புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் இராணுவம் இந்த ஆய்வை…
