மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் போட்டி.
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மதுரை சிம்மக்கல் கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவிகளுக்கு திருக்குறள் போட்டி நடத்தப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தலைமை வகித்து பேசுகையில்-நம் அண்டை நாடான வங்கதேசத்தில் மாணவ மாணவிகள் நடத்திய மொழி போராட்டத்தின் நினைவாகவே உலக தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகின் அனைத்து மொழிகளும் சிறந்தவைதான். ஒவ்வொரு மனிதனும் தன் தாய்மொழியில் சிறந்து விளங்கி அதன் மூலமாக பல்வேறு…
