இந்த மனசு வேறு யாருக்கு வரும்…சொந்த பணத்தை தந்து வீட்டை மீட்டுக் கொடுத்த அமைச்சர்.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் புதிய வட்டாட்சியர் அலுவலகத்திற்கான பூமி பூஜை விழாவில் கலந்துகொண்டு அவ்வழியே சென்ற அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அங்கு கூட்டம் நிற்பதை பார்த்து என்ன ஏதுவென்று விசாரித்துள்ளார். `வீட்டுக் கடனை திருப்பி செலுத்தாததால் செல்வராஜ் என்பவரின் வீட்டை வங்கி ஊழியர்கள் ஜப்தி செய்ய வந்த நிலையில், அந்த பக்கமாக சென்றுகொண்டிருந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தன் சொந்த பணத்தை வழங்கி வீட்டை மீட்டு கொடுத்தது’ திருமங்கலம் வட்டாரத்தில் பேசுபொருள் ஆகியிருக்கிறது. மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே சொக்கம்பட்டியைச்…
