|

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: அமைச்சர் நிர்மல் குமார் வீடு அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் அமைச்சர் நிர்மல் குமார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக தகவல் வெளியானதால் அவரது வீடு, அலுவலகத்துக்கு 40-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கார்த்திகை தீபம் ஏற்றவில்லை. இது பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து தமிழக அரசு மதுரை ஆட்சியர், திருப்பரங்குன்றம் எம்எல்ஏவும், அமைச்சருமான நிர்மல் குமார் மற்றும் காவல் துறையினரை கண்டித்து திருப்பரங்குன்றம் கோயில் அருகே நேற்று இரவு பாஜக, இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பக்தர்கள் போராட்டம் செய்தனர். இவர்களை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், தீபத் தூணில் தீபம் ஏற்றாததற்கு முக்கிய காரணமாக செயல்பட்டதாக கூறி மதுரை திருநகரிலுள்ள அமைச்சர் நிர்மல் குமார் அலுவலகம் மற்றும் தனக்கன்குளத்தில் உள்ள அவரது வீடுகளை இந்து முன்னணி கோட்ட செயலாளர் அரசு பண்டிகை தலைமையிலான 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, மதுரை திருநகரிலுள்ள அமைச்சர் நிர்மல் குமாரின் சட்டமன்ற அலுவலகம் மற்றும் வீட்டுக்கு 40-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவுக்கு எதிராகவும் விமர்சனம் எழுந்துள்ளது. இதையொட்டி அவரது வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *