உலக பட்டினி தினம்: திருப்பரங்குன்றத்தில் பொதுமக்களின் பசியை போக்கிய விஜய் ரசிகர்கள்.!
உலகபட்டினி தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 1000 பேருக்கு மதிய உணவு வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்.
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் அன்னதானம் செய்வார்கள் என்று இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருந்தார்.அதன்படி, தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவை திட்டம் மூலம் இன்று காலை 11 மணி முதல் இலவச உணவு வழங்கப்பட்டது. தமிழக மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாவட்டங்களிலும் மதிய உணவு வழங்க அறிவுறித்திருந்தார். இது, நடிகர் விஜய்யின் அரசியல் முன்னோட்டமாகவே இந்த செயல்களை பார்க்க முடிகிறது என விமர்சனங்களும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கம் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட தொண்டரணி தலைமை சார்பில் திருப்பரங்குன்றம் கோவில் சுற்றியுள்ள பகுதிகளில் அன்றாட உணவிற்காக தவிக்கும் மக்கள் இருக்கும் இடம் சென்று விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஆயிரம் பேருக்கு மாபெரும் மதிய உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்கம் மதுரை தெற்கு மாவட்ட தொண்டர் அணி தலைவர் மருதுபாண்டியன் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி தொண்டரணி தலைவர் தளபதி நசீர் ஏற்பாட்டில் 20-க்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
