அய்யா வைகுண்டரின் அவதாரத்தை விளக்கும் ஒரு குடைக்குள் திரைப்படம்.
அய்யாவின் அவதார தினத்தில் தமிழகமெங்கும் திரைக்கு வருகிறது. வரும் 24ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா
கலியை அழித்து மக்களைக் காத்து உலகில் தர்மயுகம் தழைத்தோங்க அவதரித்த அய்யாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அய்யாவின் அற்புதங்களை மையமாக வைத்து, ஒரு குடைக்குள் என்ற தலைப்பில் திரைப்படம் எடுக்கப்பட்டு வந்தது. இதற்கான படப்பிடிப்பு குமரி மாவட்டத்திலுள்ள அனைைத்து அய்யா பதிகளிலும், கடற்கரை பகுதிகளிலும் மற்றும் சென்னை, கோவை, நெல்லை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளிலும் தீவிரமாக நடைபெற்று வந்தது.
தற்போது ஒரு குடைக்குள் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்ததை தொடர்ந்து,
படத்திற்கான பின்னணி இசை சேர்ப்பு, டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்து திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது.
மேலும் இத்திரைப்படம் அய்யாவின் அவதார தினமான மார்ச் 4ம் தேதி சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, குமரி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் திரைக்கு வருகிறது. இந்த படத்தை பொன் செல்வராஜ் தயாரிப்பில், பிரபல இயக்குனர் கே.எல் உதயகுமார் இயக்கியுள்ளார். படத்திற்கு
எஸ்.ஆர்.நிலா வசனம் எழுதியுள்ளார். பிரபல இசை அமைப்பாளர் தேவா இசை அமைத்துள்ளார்.
வரும் 24ஆம் தேதி ஒருகுடைக்குள் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. ஒரு குடைக்குள் திரைப்படம் திரையிட்ட பிறகு அதன் இரண்டாம் பாகத்தை தயாரிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.