மதுரை: இந்தியன் ரெட்கிராஸ் அமைப்பின் சார்பாக சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கூத்தியார்குண்டு பிரதான சாலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டில் ஜன.18 முதல் பிப்.17-ம் தேதி வரை ஒரு மாதம், ‘சாலை பாதுகாப்பு – உயிர் பாதுகாப்பு’ என்ற கருப்பொருளை மையப்படுத்தி சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, தமிழகத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், பல்வேறு தொண்டு நிறுவனங்கள், ஓட்டுநர் பயிற்சிப்பள்ளிகள் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கூத்தியார்குண்டு பிரதான சாலையில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருப்பரங்குன்றம் வட்டக் கிளை மற்றும் கூத்தியார்குண்டு நண்பர்கள் குழு சார்பில்

சாலை விபத்து-சித்தரிப்பு செய்தபோது

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் திருப்பதி மற்றும் மாணிக்கவேல் ஆகிய இருவரும் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் என்ன நேரிடும் என்பதை சித்தரிப்பு செய்து காட்டினர்.

மேலும் சாலையில் சென்ற வாகனங்களுக்கு முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. பயணிகள், ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய துண்டு பிரசுரங்களும், இனிப்புகளும் வழங்கப்பட்டன.

சிறப்பு விருந்தினர்களாக ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் திருப்பரங்குன்றம் ஒன்றிய கவுன்சிலர் உமாதேவிபோத்திராஜ் அவர்களும் கலந்துகொண்டு வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரம் மற்றும் இனிப்புகள் பிஸ்கட்,தண்ணீர் ஆகியவற்றை வழங்கினார்கள்.
சாலை விதிகளை மதிக்காத நபர்களை வாகனத்தை நிறுத்தி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டறிக்கை கொடுத்து அறிவுரை வழங்கினார்கள். உடன் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் பாரதி,ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின், இந்தியன் ரெட்கிராஸ் திருமங்கலம் வட்டக் கிளை துணைத்தலைவர் சாலமன்,சுரபி அறக்கட்டளை சேது, சமூகஆர்வலர் வடிவேலன், சீனிவாசன், உமா மகேஸ்வரி(எ) சக்தி, கார்த்திக்சக்கரவர்த்தி, ரகு, மீரா, மருத்துவர் ஹரிமணிகண்டன், குருமூர்த்தி கார்த்தி மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

error: Content is protected !!