இராஜபாளையம் அருகே புத்தூர் பகுதியில் தேவர் சிலை கோபுரத்தில் இருந்து உடைக்கப்பட்ட முருகன் சிற்பம்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள புத்தூர் கிராமத்தில் தேவர் சிலை உள்ளது. தேவர் சிலை உள்ள கட்டிட கோபுரத்தின் மீது உள்ள முருகன் சிற்பம் வைக்கப்பட்டிருந்தது.
இந்த முருகன் சிற்பத்தை நள்ளிரவில் மர்ம நபர்கள் அடித்து நொறுக்கியதில் தலைப்பகுதி உடைந்து காணப்பட்டது. இதை அதிகாலையில் பார்த்த பொதுமக்கள் காவல்துறையிடம் குற்றவாளிகளை கைது செய்ய கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த
இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையிலான போலீசார் மற்றும் இராஜபாளையம் வட்டாட்சியர் ஸ்ரீதர் ஆகியோர் துரிதமாக நடவடிக்கை எடுத்து உடைக்கப்பட்ட முருகன் சிற்பத்தை புதிதாக வைத்து 3 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது.
மேலும் குற்றவாளிகளை பிடிப்பதற்கு விரைந்து செயல்பட்டு வருகின்றனர். காவல்துறையின் துரித நடவடிக்கையால் பெரிய பிரச்சனை தவிர்க்கப்பட்டது என சமூக ஆர்வலர்கள் கூறிவந்தனர்.
பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்ற சூழ்நிலை நிலவியதை தொடர்ந்து அப்பகுதியில் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.