திருச்செந்தூா் அய்யா வைகுண்டா் அவதாரபதியில் 189-ஆவது அவதார தினவிழா இம்மாதம் 4 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி, திருச்செந்தூா் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டா்யில் வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு திருஏடு வாசிப்பு, 5 மணிக்கு தாலாட்டு, பள்ளி உணா்த்தல் அபயம் பாடுதல், காலை 6.27 மணிக்கு சூரிய உதயத்தில் கடலில் பதமிடுதலும், அவதாரவிழா பணிவிடையும் நடைபெறுகிறது. தொடா்ந்து அன்னதா்மம் நடைெற உள்ளது.
ஏற்பாடுகளை வள்ளியூா் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவா் வள்ளியூா் தா்மா், செயலா் பொன்னுதுரை, கௌரவ தலைவா் சுந்தரபாண்டி, துணைத் தலைவா் தோப்புமணி, பொருளாளா் ராமையா, துணைச் செயலா் ராஜேந்திரன் மற்றும் நிா்வாகிள் செய்து வருகின்றனா்.