மதுரை ஏர்போர்ட் அருகே வீடுகளை இடிக்க JCB-யோடு வந்த அதிகாரிகள்.. மக்கள் பேராட்டம்.!
மதுரை சின்ன உடைப்பு பகுதியில் நிலம் கையகப்படுத்த வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் காவல் துறையினர் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது
மதுரை சின்ன உடைப்பு பகுதியில் விமான நிலைய விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதில் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை எனவும் மாநகராட்சி பகுதிகளில் 3 சென்ட் இடம் மற்றும் குடியிருக்க வீடு கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையை கவன ஈர்ப்பு கூட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இன்று மதுரை வருவாய் கோட்டாச்சியர் கார்த்திகாயினி, விமான நிலைய நில எடுப்பு தாசில்தார் பிரபாகரன், மதுரை தெற்கு தாசில்தார் ஜெயலட்சுமி மற்றும் திருமங்கலம் உதவி காவல் கண்காணிப்பாளர் அன்சுல் நாகர்,மதுரை அவனியாபுரம் காவல் உதவி ஆணையர் சீதாராமன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மதுரை விமான நிலையம் விரிவாக்க பணிக்காக கையகப்படுத்த பட்ட இடத்தில் 146 குடியிருப்புகள் உள்ளன அவற்றை அகற்ற ஜேசிபி எந்திரங்கள் கொண்டுவரப்பட்டு தற்போது வீடுகளை எடுக்க வருவாய்த்துறை காவல் துறை தயாராக வந்தனர். இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக காத்திருந்த பொது மக்களிடம் அதிகாரிகள் மற்றும் காவல் தறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதில் தற்காலிகமாக இன்று ஆக்கிரமிப்பு அகற்றுவதை கைவிடுவதாக அதிகாரிகள் தெரிவித்தது ஒட்டி பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இன்று மாலை மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் அமைச்சர் மூர்த்தியுடன் பொதுமக்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி தங்கள் கோரிக்கையை முன்வைக்க உள்ளனர். ஆனாலும் நாளை காலை மீண்டும் வருவதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்து விட்டு சென்றுள்ளதால் சின்னஉடைப்பு பகுதியிள் சிறிது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.