ராஜபாளையம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மாசி மகம் பிரம்மோற்சவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ராம்கோ குழுமத் தலைவர் பி.ஆர் வெங்கட்ராம ராஜா தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி முன்னதாக கொடிமரத்திற்கு வேதமந்திரங்கள் முழங்க அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர் சொக்கர்,மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை ராம்கோ குழும ஊழியர்கள் செய்திருந்தனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்போற்சவம் பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெற உள்ளது.