அஞ்சல் தலை மூலம் மலேரியா விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் திருச்சி அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள்

பொழுது போக்கின் அரசன் அஞ்சல்தலை சேகரிப்பு என்பர்உலக அளவில் அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் பல்வேறு கருப்பொருட்களை மையமாக வைத்து அஞ்சலதலையினை சேகரித்து வருகிறார்கள். திருச்சிராப்பள்ளியில் அஞ்சல் தலை சேகரிப்பாளரான அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா உள்ளிட்டோர் மலேரியா விழிப்புணர்வுக்காக அஞ்சல் தலை சேகரித்து வருகிறார்கள்.
இது குறித்து பேசுகையில்,
ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர் ஒவ்வொரு ஆண்டும் 219 மில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே இதனை கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு 2007இல் மலேரியா தினம் ஏப்ரல் 25 அறிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
தொற்றுநோய்களில் மலேரியாவும் ஒன்றாகும். இது பொதுச்சுகாதாரத்திற்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. பேரினம் பிளாஸ்மோடியம் மலேரியா நோய்க்காரணி ஒட்டுண்ணிகளினால் இந்த நோய் ஏற்படுகிறது. பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணியின் ஐந்து வகை இனங்கள் மனிதர்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம்; நோயின் மிகவும் கடுமையான தன்மை பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபாரத்தனால் ஏற்படுத்தப்படுகிறது. பிளாஸ்மோடியம் விவக்ஸ் (Plasmodium vivax), பிளாஸ்மோடியம் ஓவலே (Plasmodium ovale) மற்றும் பிளாஸ்மோடியம் மலேரியா (Plasmodium malariae) ஆகியவற்றின் காரணத்தினால் ஏற்படும் மலேரியா மனிதர்களுக்கு மிகவும் லேசான நோய்த் தாக்கத்தையே ஏற்படுத்துகிறது. இதற்கு பொதுவாக கொல்லும் தன்மை இல்லை. ஐந்தாவது இனமான பிளாஸ்மோடியம் நோலெசி (Plasmodium knowlesi), குட்டை வால் குரங்குகளுக்கு மலேரியா நோய் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது மனிதர்களுக்கும் நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம். மனிதர்களுக்கு நோய்விளைவிக்கும் தன்மையைக் கொண்ட இந்த வகை பிளாஸ்மோடியம் இனங்கள் வழக்கமாக மலேரியா ஒட்டுண்ணிகள் என்று கருதப்படுகின்றன.

வழக்கமாக நோய்க்காவியான பெண் அனாஃபிலிஸ் (Anopheles) கொசு மக்களைக் கடிப்பதன் மூலம் மலேரியா நோய் ஏற்படுகிறது. அனாஃபிலிஸ் (Anopheles) கொசுக்களினால் மட்டுமே மலேரியா நோய் மற்றவர்களுக்கு பரவுகிறது. நோய்த்தொற்று ஏற்பட்ட ஒரு நபரிடமிருந்து இரத்த உணவை உட்கொள்ளும்போது அவை அவரிடமிருந்து நோய்க்காரணியான பிளாஸ்மொடியம் ஒட்டுண்ணியைப் பெற்று வேறொரு நபரில் இரத்த உணவை உண்ணும்போது அவருக்கு அந்நோயை கடத்துகிறது. நோய்த்தொற்றுடைய கொசு ஒரு நபரைக் கடிக்கும் போது சிறிய அளவு இரத்தத்தை எடுத்துக்கொள்கிறது. அந்த இரத்தத்தில் நுண்ணிய மலேரியா ஒட்டுண்ணிகள் இருக்கின்றன. சுமார் ஒரு வாரத்திற்கு பிறகு அந்தக் கொசு அதனுடைய அடுத்த இரத்த உணவை எடுத்துக்கொள்வதற்காக மற்றொரு நபரைக் கடிக்கும் போது இந்த ஒட்டுண்ணிகள் கொசுவின் உமிழ் நீரில் கலந்து அந்த நபருக்கு செலுத்தப்படுகிறது. இந்த ஒட்டுண்ணிகள் இரத்த சிவப்பணுக்களில் பெருக்கமடைந்து ஏற்படுத்தும் அறிகுறிகளாவன: இரத்த சோகை (தலை லேசாக இருப்பதுப் போல் உணருதல், சுவாசித்தலில் சிரமம் ஏற்படுதல், இதயத் துடிப்பு மிகைப்பு, இன்னும் பல). மற்ற பொது அறிகுறிகளாவன: காய்ச்சல், கடுங்குளிர், குமட்டல், ஃப்ளூ போன்ற உடல்நலக் குறைவு மற்றும் சில நோயாளிகளுக்கு நோய் தீவிரம் அடைவதன் காரணத்தினால் ஆழ்மயக்கம் (கோமா) மற்றும் மரணம் நேரிடலாம். கொசு வலைகள் மற்றும் பூச்சி விலக்கிகள் ஆகியவற்றின் மூலம் கொசு கடிக்காமல் தடுக்கலாம் அல்லது வீடுகளுக்கு உள்ளே பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்தல் மற்றும் கொசுக்கள் முட்டையிடும் தேங்கு தண்ணீரை வடித்து அகற்றுதல் போன்ற கொசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மூலம் மலேரியா நோய்த்தொற்று பரவுதலை குறைக்கலாம். பல வித்தியாசமான முறைகளின் மூலம் மலேரியா தடுப்புமருந்துகள் கண்டுபிடிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவை சிறிது வெற்றியும் கொடுத்தது. கொசுக்களுக்கு ஒட்டுண்ணியை எதிர்க்கும் சக்தியை உருவாக்குவதற்காக கொசுக்களுக்கு மரபியல் ரீதியாக சில மாற்றங்கள் செய்யப்படுவதும் கருத்தில் கொள்ளப்பட்டது

நோய்த்தொற்றின் ஆபத்தை குறைப்பதற்கு இந்திய அஞ்சல் துறையினர் விழிப்புணர்வை ஏறாபு ஏற்படுத்தும் விதத்தில் இதனை பார்த்த அஞ்சல் தலை விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட அஞ்சல் அட்டை இன்லேண்ட் லெட்டர் கடிதம் வெளியிட்டன.. இதனை சேகரிப்பார்கள் கொண்டு திருச்சிராப்பள்ளி அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் விஜயகுமார் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் கீர்த்தனா உள்ளிட்டோர் மலேரியா விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்
.மலேரியாவின் அறிகுறிகளாவன: காய்ச்சல், உடல் நடுக்கம், மூட்டுவலி (மூட்டுகளில் வலி ஏற்படுதல்), வாந்தி, இரத்த சோகை (இரத்தமழிதலினால் ஏற்படுகிறது), ஈமோகுளோபின் நீரிழிவு, விழித்திரை சேதமடைதல்,மற்றும் வலிப்புகள். சுழற்சி முறையில் ஏற்படும் . இந்த பாதிப்பு குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. மூளை வளர்ச்சி அதிவேகமாக இருக்கும் காலத்தின் போது இரத்த சோகையையும் நேரடி மூளை பாதிப்பையும் இது ஏற்படுத்துகிறது. குழந்தைகள் மிகவும் எளிதாக பாதிப்படைய கூடிய பெருமூளைச்சிரைக்குரிய மலேரியாவினால் நரம்பியல் ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது பெருமூளைச்சிரைக்குரிய மலேரியா விழித்திரை வெண்மையாகுதலுடன் தொடர்புடையதாக இருக்கிறதமற்ற காய்ச்சலிருந்து இந்த அறிகுறி தான் இந்த நோயைவேறுபடுத்திக் காட்டுகிறது வழக்கமாக நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு 6 முதல் 14 நாட்களில் இந்த நோய் தீவிரமடையும். ஆழ்மயக்கம் (கோமா) மற்றும் இறப்பு ஆகியவை மலேரியாவின் கடுமையான நோய் நிலையின் விளைவுகளாகும். மலேரியா நோய்க்கு சிகிச்சை அளிக்கபடாவிட்டால் இளம் குழந்தைகளும் கர்ப்பிணிகளும் எளிதில் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது. மண்ணீரல் பிதுக்கம் (மண்ணீரல் விரிவடைதல் (பெரிதாகுதல்), கடுமையான தலைவலி, பெருமூளைச்சிரையில் குருதியோட்டக்குறைவு ஏற்படுதல், ஈரல் பெருக்கம் (ஈரல் விரிவடைதல்), இரத்தசை சர்க்கரைக் குறைவு மற்றும் சிறுநீரக செயலிழப்புடன் ஈமோகுளோபின் நீரிழிவு ஏற்படலாம். சிறுநீரக செயலிழப்பு கறுநீர்க்காய்ச்சலை ஏற்படுத்தலாம். இதன் காரணத்தினால் சிதைவடைந்த இரத்த சிவப்பணுக்களிலிருந்து ஹீமோகுளோபின் சிறுநீர் வழியாக வெளியாகும். மலேரியாவின் கடுமையான நோய் நிலை மிகவும் விரைவாக அதிகரித்து சில மணிநேரங்கள் அல்லது நாட்களுக்குள் மரணத்தை ஏற்படுத்தலாம்.தீவிர பராமரிப்பு மற்றும் சிகிச்சையில் இருந்தும் கூட அதிகமான நேரங்களில் கடுமையான நோய் தாக்கம் இருக்கும் நோயாளிகள் மத்தியில் நோய் இறப்பு வீதம் 20 சதவீதத்திற்கும் அதிகமாகிவிடுகிறது

அனாஃபிலிஸ் ஆல்பிமானஸ் கொசு மனித கரத்தின் மேல் உணவு உட்கொண்டிருக்கிறது.இந்த கொசு மலேரியநோய் பரப்பியாகும். கொசுவை கட்டுப்படுத்துதல் மலேரியாவின் நோய் நிகழ்வு குறைக்கும் மிகச்சிறந்த முறையாகும்.
நோய் பரவாமல் தடுப்பதற்கு அல்லது மலேரியா ஆண்டும் முழுவதும் தோன்றும் நோயாக இருக்கும் பகுதிகளில் வசிப்பவர்களைப் பாதுகாப்பதற்கு பயன்படுத்தும் முறைகளாவன: ப்ரோஃபிலாக்டிக் (முற்காப்பி) மருந்துகள், கொசுக்களை முற்றிலுமாக அழித்தல் மற்றும் கொசுக் கடித்தலை தடுத்தல். மக்கள்தொகை அடர்த்தி அதிகமாக இருத்தல், கொசுவின் தொகை அடர்த்தி அதிகமாக இருத்தல் மற்றும் மனிதர்களிடமிருந்து கொசுவிற்கும் கொசுவிடமிருந்து மனிதர்களுக்கும் நோய் பரவுதலின் வீதம் அதிகமாக இருத்தல் ஆகிய அனைத்தும் சேர்ந்து இருக்கும் பகுதியில் மலேரியாவின் நோய் தாக்கம் தொடர்ந்து இருக்கும். இவற்றில் ஏதாவது குறிப்பிட்ட அளவு குறைந்ததானால் அந்த பகுதியை விட்டு ஒட்டுண்ணி சீக்கிரமாகவோ அல்லது சிறிது நாட்கள் கழித்தோ மறைந்துவிடும். இதனால்
நோய் பரப்பும் உயிரியைக் கட்டுப்படுத்துதல் விதமாக கொசுக்களை அகற்றுவது குறித்து அஞ்சல்தலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள் திருச்சி அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள்

மலேரியா தடுத்தல், சமூக கல்வி மற்றும் மலேரியாவினால் ஏற்படும் ஆபத்துகளை குறித்து விழிப்புணர்வு அளித்தல் ஆகியவற்றுடன் கொசு வலை பிரச்சாரமும் ஒரு முக்கிய அங்கமாக அஞ்சல் தலை சேகரிப்பு இடம்பெற்று இருக்கிறது.

Leave a Reply

error: Content is protected !!