அதிமுக கொடியுடன் வந்த சசிகலா – சட்டென்று அப்பீட்டான ஈபிஎஸ்.!

சென்னை: உடல்நலக்குறைவால் அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை குறித்து சசிகலா கேட்டறிந்தார்.

அப்போது அந்த காரில் அதிமுக கொடியுடன் சசிகலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அவரது உடல்நிலை கவலைக்கிடமானதை தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, மருத்துவமனைக்கு சென்று மதுசூதனன் உடல்நிலை குறித்து விசாரித்துக்கொண்டிருந்தார். அப்போது, சசிகலாவும், அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில். மதுசூதனன் உடல்நிலை குறித்து விசாரிக்க மருத்துவமனைக்கு வந்தார். இதனையறிந்த பழனிசாமி அங்கிருந்து கிளம்பி அப்பீட்டாகி சென்றார்.

தொடர்ந்து மதுசூதனன் உடல்நிலை குறித்து கேட்டறிந்த பின்னர் சசிகலா நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் விரைவில் உடல்நலம்பெற வேண்டும். அதிமுக மீது பற்றுக்கொண்ட அவரது உடல்நலம் குன்றியதை அறிந்து நேரில் பார்க்க வந்தேன். இவ்வாறு அவர் கூறினார். சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த பின்னர், அக்கட்சி நிர்வாகிகளுடன் ஆடியோ மற்றும் வீடியோ வாயிலாக பேசி, அதனை வெளியிட்டு வருகிறார். அவ்வாறு சசிகலாவுடன் பேசியவர்கள் கட்சியில் இருந்து நீக்கி பழனிசாமி மற்றும் பன்னீ்செல்வம் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள சசிகலா திடீரென அதிமுக கொடி கட்டி மருத்துவமனைக்கு வந்து மதுசூதனன் உடல்நிலை குறித்து விசாரித்தது அதிமுக மற்றும் அமமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

error: Content is protected !!