மலைகளை வெட்டி கடத்தாதே…எச்சரிக்கும் நாம் தமிழர் கட்சியினர்-தடுத்து நிறுத்துமா தமிழக அரசு.!

கன்னியாகுமரியில் மலைகளை வெட்டி கேரளாவிற்கு கடத்துவதை உடனே தடுக்க வேண்டி நாம் தமிழர் கட்சியின் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல் என நான்கு வகை நில அமைப்புகளை கொண்ட தனிச்சிறப்பு வாய்ந்த மாவட்டம் ஆகும்.

குறிப்பாக 48.9% விவசாய நிலங்களை கொண்ட மாவட்டம் இரண்டு பருவ மழையும் பொழியும் ஒரே மாவட்டம் இந்த கன்னியாகுமரி மாவட்டம் தான்.

வள்ளியாறு,தாமிரபரணி ஆறு,பழையாறு என மூன்று ஆறுகள் பாய்கிறது. எங்கு பார்த்தாலும் பச்சை கம்பளம் போர்த்தியது போல் புல் வெளிகள் மனதை கொள்ளை கொள்ளும். 32.5% அடர்ந்த வனப்பகுதிகளும், 6 அணைகட்டுக்களோடு இத்தனை இயற்கை வளங்களுக்கும் ஒரே காரணம் இந்த மேற்கு தொடர்ச்சி மலைதான். ஆனால் நம் சந்திகளுக்கு இதை பார்க்கும் வாய்ப்புகள் மிக குறைவு என தோன்றுகிறது காரணம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் மலை அழிப்பு அரசின் அனுமதியோடு மேற்கு தொடர்ச்சி மலையை உடைத்து கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்புகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மலைகளை தொடர்ச்சியாக உடைத்து தினமும் ஆயிரக்கணக்கான கனரக லாரிகள் மூலம் கேரளாவிற்கு கடத்துவதை உடனடியாக தடுத்து நிறுத்தி கன்னியாகுமரியின் வளங்களை பாதுகாக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் அழகியமண்டபம் சந்திப்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் குமரி மத்திய மாவட்ட செயலாளர் ஆன்றலின் சுஜித், பத்மநாபபுரம் தொகுதி செயலாளர் சீலன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

மத்திய மாவட்ட தலைவர் பபின் தாஸ் ரிசோ, குளச்சல் தொகுதி தலைவர் மெல்பின் கலாஸ், கிழக்கு மாவட்ட பொருளாளர் அனிட்டர் ஆல்வின், முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர் கிம்லர் கண்டன உரையாற்றினார். மாநில தகவல் தொழில்நுட்ப பாசறை பொறுப்பாளர் ஜெகநாதன், கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயன்றீன், வடக்கு மாவட்ட தலைவர் கிளிட்டஸ் , செயலாளர் சதீஷ் , விளவங்கோடு செயலாளர் அருள், கிள்ளியூர் பீட்டர், நாகர்கோவில் தொகுதி தலைவர் தனுஷ், செயலாளர் விஜயராகவன், பத்மநாபபுரம் தொகுதி துணை செயலாளர் கிப்சன், பொருளாளர் ஜெர்பின் ஆனந்த், குளச்சல் தொகுதி மகளிர்பாசறை செயலாளர் ஆன்றணி ஆஸ்லின், துணை தலைவர் செல்வகுமார், இணை செயலாளர் ஆன்றோ பெலிக்ஸ், மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒரு மலையை எளிதாக உடைத்து விடலாம் ஆனால் எத்தனை கோடி செலவு செய்தாலும் ஒரு மலையை நம்மால் உருவாக்க முடியாது என இந்த அரசியல்வாதிகளுக்கு எப்போது புரியப்போகிறதோ..? நமக்கு கிடைத்த இந்த இயற்க்கை அதிசயத்தை நம் சந்ததிகளும் அனுபவித்து பயன் பெற மலைகள் உடைக்கப்படுவதை தடுப்போம் ! நம் கன்னியாகுமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை காப்போம் !

Leave a Reply

error: Content is protected !!