பாகுபாடு காட்டும் அரசு..மதுரைக்கும் கிடைக்குமா சர்வதேச அங்கீகாரம்? அம்பானி வீட்டு திருமணத்தால் தொடங்கியது சர்ச்சை!

உலக பிரபலங்கள் வருகை

Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி மும்பையில் நடைபெற உள்ளது.

சிறு வயதில் ஜாம்நகரில் வளர்ந்ததால் திருமணத்தை அங்கு வைக்க வேண்டும் என்று ஆனந்த் அம்பானி தெரிவித்திருந்தார். இவர்களின் திருமண கொண்டாட்டத்திற்காக திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், மற்றும் உலக பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், ஜாம் நகருக்கு Mark Zuckerberg, Bill Gates, Shah Rukh Khan, Salman Khan, Janhvi Kapoor, Manushi Chillar, Rani Mukerji, Manish Malhotra, Ranveer Singh, Deepika Padukone, Alia Bhatt, Ranbir Kapoor, Atlee உள்ளிட்டோர் வருகை புரிந்துள்ளனர்.

மதுரைக்கு சர்வதேச அங்கீகாரம்?

இதற்காக ஜாம்நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச அங்கீகாரம் தற்போது கொடுக்கப்ப்டடுள்ளது. அதாவது, ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்க்காக பல்வேறு நாடுகளில் இருந்து பிரபலங்கள் வரவுள்ளதால், ஜாம்நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “10 நாட்கள் திருமண கொண்டாட்டத்திற்காக ஜாம்நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பல ஆண்டுகளாக மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அங்கீகாரம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டும் இந்திய அரசு பாகுபாடு காட்டுவது ஏன்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதே போல மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “மோடி அரசின் மெகா “மொய்”. முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண விருந்துக்காக ஜாம் நகர் விமான நிலையத்துக்கு 10 நாள் சிறப்பு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து.

6 விமானங்கள் இறங்கி ஏறுகிற இடத்தில் 140 விமான சேவைக்கு ஏற்பாடு. ஆனால் மதுரையின் பல ஆண்டு சர்வதேச விமான நிலையக் கோரிக்கை மட்டும் இன்று வரை ஈடேறவில்லை. தமிழ்நாட்டுக்கு எதற்கு 4 வது சர்வதேச விமான நிலையம் என்று கேள்வி கேட்டவர்கள் தான் இவர்கள்” என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!