சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் 13வது ஆண்டாக பூச்சொரிதல் விழா… ஏராளமான பெண்கள் பூத்தட்டு ஏந்தி ஊர்வலம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா வருகின்ற 10ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது தமிழகத்தில் அதிக நாட்கள் அதாவது 17 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவிற்கான முகூர்த்த கால் நடுதல் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேல் பூச்சொரிதல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது கோவிலில் இருந்து அம்மன் பூ பல்லக்கில் சோழவந்தானின் நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக வந்து பொதுமக்களுக்கு அருள் பாலித்தார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டு ஏந்தி அம்மன் முன்பு சென்றனர் தொடர்ந்து கோவிலின் முன்பு அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது பூ அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் தொடர்ந்து 13 ஆவது ஆண்டாக பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது இதில் பரி மனம் நாராயணன் கிருஷ்ணமூர்த்தி கண்ணன் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!