தங்கமாய் ஜொலித்த ஆஞ்சநேயர்… குளிர்காலத்தில் மட்டும் நடக்கும் ஸ்பெஷல் என்ன தெரியுமா!
குளிர்காலத்தில் இன்று வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த நாமக்கல் ஆஞ்சநேயர்.
நாமக்கல் நகரத்தின் மையப்பகுதியில் 18 அடி உயரத்தில் விஸ்வரூப ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆஞ்சநேயர் பெரும்பாலும் பிரச்சினைகளைத் தீர்க்கும் கருணைக்கரராக கருதப்படுகிறார். ராமாயணத்தில் சீதையை தேடுவதில் அவர் வெளிப்படுத்திய அசாதாரண ஆற்றலுக்கும் வேகத்திற்கும் அடையாளமாக வெண்ணெய் சாத்தப்படுகிறது.
ஆஞ்சநேயர் சுவாமிக்கு நாள்தோறும் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாகக் குளிர்காலமான கார்த்திகை, மார்கழி ,தை மாதங்களில் வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு 110 கிலோ எடையுள்ள வெண்ணெய்யைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
அந்த அலங்காரத்தில் காட்சி அளித்த ஆஞ்சநேயர் சுவாமியைப் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இனி மார்கழி, தை மாதங்களில் வரும் நாட்களில் இரவு நேரங்களில் நாமக்கல் ஆஞ்சநேயர் பகவான் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் காட்சி அளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.