திருப்பரங்குன்றம் அருகே மூலக்கரை பகுதியில் இருசக்கர வாகன விபத்தில் பெண் காயம் -பரபரப்பு சிசிடிவி காட்சி

திருப்பரங்குன்றம் அருகே மூலக்கரை பகுதியில் இருசக்கர வாகன விபத்தில் பெண் காயம் -பரபரப்பு சிசிடிவி காட்சி

மதுரை மாநகரிலிருந்து திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் கருமையான போக்குவரத்து நெரிசலால் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
திருப்பரங்குன்றம் மூலக்கரை சாலையில் போக்குவரத்து நெரிசினால் சிக்கி ஆம்புலன்ஸ் 45 நிமிடம் தாமதமாக வந்து அடிபட்ட வரை மீட்டுச் சென்றது.

மதுரை அண்ணா நகர் செண்பகத் தோப்பு பகுதியைச் சேர்ந்த உசேன் என்பவரின் மனைவி இஷான் பேகம் ( வயது 38) திருப்பரங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலை மற்றும் காலில் விபத்து ஏற்பட்டது.

விபத்தில்இருசக்கரம் ஒட்டி வந்த இஷான் பேகம் காயம் அடைந்தார். காயம் அடைந்த வரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தனர்.

ஆனால் திருப்பரங்குன்றம் – பழங்காநத்தம் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் ஆம்புலன்ஸ் வருவதற்கு 45நிமிடம் தாமதமானது.

அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!