திருப்பரங்குன்றத்தில் தீபத் திருவிழா – சேஷ வாகனத்தில் சுவாமி வீதிவுலா!

திருப்பரங்குன்றத்தில் தீபத் திருவிழா – சேஷ வாகனத்தில் சுவாமி வீதிவுலா!

அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 10 நாள் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருக்கார்த்திகை தீப திருவிழா டிசம்பர் 5ம் தேதி தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த விழாவானது டிசம்பர் 14ஆம் தேதி வரை நடக்கிறது.

தொடர்ந்து, தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், இரவில் வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம், வெள்ளி ஆட்டுக்கிடா வாகனம், தங்கமயில் வாகனம், தங்கக் குதிரைவாகனம் என்று தினமும் ஒரு வாகனத்திலும் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.


திருவிழாவின் 4-ம் நாளான இன்று தெய்வானையுடன் முருகப்பெருமான் காலை தங்கச் சப்பரத்திலும், இரவில் சேஷ வாகனத்திலும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!