இயக்குனர் பாலாவிற்கு பாராட்டு விழா – மேடையில் உருகி பேசிய சீமான்!

தமிழ் சினிமாவில் மிகவும் கவனம் பெற்ற இயக்குனராக வலம் வருபவர் பாலா. அவரது படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன.

1999ம் ஆண்டில் சேது படம் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து நந்தா, நான் கடவுள், பிதாமகன், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை ஆகிய படங்களை இயக்கினார்.

வருகிற ஜனவரி 10ம் தேதி பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான் படம் திரைக்கு வருகிறது. கடந்த 25 ஆண்டுகளில் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான படங்களின் எண்ணிக்கை 10ஐ கூட தாண்டவில்லை. எனினும் ரசிகர்களால் அவர் கொண்டாடப்படுகிறார்.

சமீபத்தில் இயக்குனர் பாலாவுக்கு தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக பாராட்டு விழா நடந்தது. இதில் நடிகர்கள் சிவக்குமார் சூர்யா சிவகார்த்திகேயன் அருண் விஜய் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட திரைப்பட இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என பலர் கலந்துக்கொண்டு பாலாவை வாழ்த்தியும் பாராட்டியும் பேசினர்.

பாலா இயக்குனராக முதலில் அறிமுகமான படம் சேது. இந்த படம்தான் நடிகர் விக்ரம் திரை பயணத்தில் மிக முக்கியமான திருப்புமுனை படமாக அமைந்தது. இந்த படத்தில்தான் அவருக்கு சியான் விக்ரம் என்ற பட்டப் பெயரும் கிடைத்தது. சிவக்குமார் ஸ்ரீமன் அபிதா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

சேது இந்தியில் சல்மான்கான் நடிப்பில் ரீமேக் செய்யப்படுவதாக ஒரு தகவல் அப்போது இருந்தது. சமீபத்தில் ஒரு நேர்காணலில் இதுகுறித்து பேசிய இயக்குனர் பாலா கூறியதாவது, கோடில சம்பளம் வாங்கிட்டு 2 மணி நேரம் டூப் வெச்சு எடுக்கச் சொன்னால் அது எவ்வளவு பெரிய அக்கிரமம். அப்படியும் ஒரு ஸ்டார் சேது படத்தை ரீமேக் பண்ணும் போது இருந்தார்.

வழக்கமாக அவருக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்ணிட்டு, இதோ 15 நிமிஷத்துல வந்துடுவார் என்று சொன்ன உடனே நான் பேக் எடுத்துட்டு கிளம்பிட்டேன். அவர் வந்து ரூம்ல யாரும் இல்லை என்பதை பார்க்கட்டும் என்று தான் கிளம்பிட்டேன். அதுவரைக்கும் அங்கதான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அப்பொழுதுதான் புரியும், அப்படி எல்லாம் காத்து கிடந்து படம் பண்ணனும்னு அவசியம் எனக்கு இல்லை என்று இயக்குனர் பாலா கூறியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!