இடிந்து விழும் நிலையில் அரசுப்பள்ளி… அச்சத்தில் மாணவர்கள்

அஞ்சுகிராமம் அருகே இடிந்து விழும் அபாய நிலையில் அரசு பள்ளி கட்டிடம். மாணவ மாணவிகள் அச்சம். உரிய நடவடிக்கை எடுக்க முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் ஊர் மக்கள் கோரிக்கை. 

அஞ்சுகிராமம் அருகே கனகப்பபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் இடிந்து விழும் அபாய நிலையில் அரசு பள்ளி கட்டிடம் உள்ளது. இதனால் மாணவ மாணவிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே கட்டிடத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட கனகப்பபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 109 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் எட்டு ஆசிரிய, ஆசிரியைகள் பணிபுரிந்து  வருகிறார்கள். இந்தப் பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறை கட்டிடம் தொடர் கனமழை காரணமாக கான்கிரீட் பெயர்ந்து விழுந்து கொண்டிருக்கிறது. இதனால் இந்த கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே மாணவ மாணவிகளுக்கு பெரிய ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று கருதிய முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து அந்த கட்டிடத்தில் மாணவ மாணவிகளை உள்ளே அனுமதிக்க கூடாது என்றும் மாணவ மாணவிகளை காப்பாற்ற வேண்டும் எந்த நோக்கத்தில் அந்த வகுப்பறை கட்டிடத்தின் முன் பக்கம் ஒரு சுவரொட்டி எழுதி ஒட்டியதோடு ஆசிரியர் ஆசிரியரிடம் கேட்டுக்கொண்டனர். அதன்பேரில் அந்த வகுப்பறையில் மாணவ மாணவிகள் அனுமதிக்கப் படவில்லை. தொடர்ந்து பொதுமக்கள்  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்,  கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியதுடன்  உடனடியாக இந்த கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!