சுவாமி ஐயப்ப பக்தர்களுக்கு தொண்டு செய்யும் நோக்கில் தமிழ்நாடு ஐயப்பா அறக்கட்டளை என்ற புதிய அமைப்பின் கொடி மற்றும் லோகோ அறிமுக நிகழ்ச்சி நாகர்கோவிலில் நடைப்பெற்றது.
சுவாமி ஐயப்ப பக்தர்களுக்கு தொண்டு செய்யும் விதத்திலும் சுவாமி ஐயப்பனின் பெயரில் பொது மக்களுக்கும், பள்ளி மாணவ மாணவியர்,முதியோர் மற்றும் கண்பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு உதவும் நோக்கில் தமிழ்நாடு ஐயப்பா அறக்கட்டளை கொடி மற்றும் லோகோ
அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைப்பெற்றது. இதில் சாதிமத பேதம் இல்லாமல் அனைவருக்கும் சேவை செய்யும் நோக்கிலும் தமிழ்நாட்டில்
இருக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவிகள் செய்யவும் மத்திய மாநில அரசிடமிருந்து ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும்
திட்டங்களை அரசிடமிருந்து பெற்றுத்தரவும் இந்த தமிழ்நாடு ஐயப்பா அறக்கட்டளை அமைப்பு தொடங்கப்பட்டதாக தமிழ்நாடு ஐய்ப்பா அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர். இதில் மாநில தலைவர்
செல்வின், பொதுச்செயலாளர் பால்ராஜ், பொருளாளர் ஜெகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.