கண்டிப்பாக தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டும். குமரி மாவட்ட கூடுதல் கலெக்டர் மெர்சி ரம்யா வேண்டுகோள்

கொரோனா காலத்தில் முன்களப் பணியாளர்களாக பணியாற்றிய துய்மைப் பணியாளர்கள் என்ன கொரோனா தடுப்பூசி போட்டுகொள்ளவேண்டும் என்று துணைகலெக்டர் மெர்சிரம்யா பேசினார்.


கன்னியாகுமரி தங்கும்விடுதி உரிமையாளர்கள் சங்கம் சார்பில்
கோவிட் 19 முன்கள பணியாளர்களுக்கு பாராட்டுவிழா கன்னியாகுமரியில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமை வகித்தார்.தங்கும்விடுதி சங்க செயலாளர் ராஜேஷ் வரவேற்றார்.நிகழ்ச்சியில் கன்னியாகுமரி டவுண் பஞ்.,பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பரிசினை வழங்கிய கன்னியாகுமரி மாவட்ட துணை ஆட்சியர் மெர்சிரம்யா பேசியதாவது :-
கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட தொடங்கியது.அந்தகாலத்தில் வெளியூரில் இருந்து ஏராளமானோர் வந்தார்கள்.அவர்களை கன்னியாகுமரியில் கோரைண்டன் காலத்தில் இந்த முன்களபணியாளர்கள் தான் எந்த வித முகம் சுழிக்காமல் அறைகளை தினமும் சுத்தப்படுத்தி
தயார்படுத்தினார்கள். அந்த இக்கட்டான நேரத்தில் கூட நீங்கள்தான் தைரியமாக உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றியதை யாரும் மறக்கவில்லை.இன்று கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு போடப்பட்டுவருகிறது.அதிலும் முன்களபணியாளர்கள் கண்டிப்பாக போட்டுகொள்ளுங்கள்.உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அரசை அணுகி உங்கள் சந்தேகத்தை போக்கிகொள்ளுங்கள்.கொரோனா காலத்திலேயே எங்களை தாக்கவில்லை,நாங்கள் ஏன் கொரோனா தடுப்பூசி போடவேண்டும் என்று நீங்கள் எண்ணவேண்டாம்.உங்களின் இந்த பணி பாராட்டதக்கது.எந்த பாதிப்பும் வராத தடுப்பூசியை போட்டுகொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கன்னியாகுமரி டவுண் பஞ்.,செயல்அலுவலர் சத்தியதாஸ்,சுகாதார அலுவலர் முருகன்,கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன்,தங்கும்விடுதி நிர்வாகிகள் தாமஸ்,ராஜ்கோமஸ், அல்போன்ஸ்உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.

Leave a Reply

error: Content is protected !!