கார்த்திகை தீபத் திருவிழா – திருப்பரங்குன்றத்தில் கோலாகல பட்டாபிஷேகம்.!

கார்த்திகை தீபத் திருவிழா – திருப்பரங்குன்றத்தில் கோலாகல பட்டாபிஷேகம்.!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தத் திருவிழா வருகின்ற 14-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை 6.30 முதல் இரவு 7.30 மணி மிதுன லக்னத்தில் தீப, துப ஆராதனை நடைபெற்று முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவிலுக்குள் உள்ள 6 கால் மண்டபத்தில் சர்வ அலங்காரத்தில் முருகப்பெருமான் எழுந்தருளினார்.

அங்கு சிறப்பு பூஜை நடைபெற்றதையடுத்து மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமானின் தலையில் கிரீடம் சூடியும், திருக்கரத்தில், நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட செங்கோல் சாற்றுப்படி செய்து பட்டாபிஷேகமும் கோலாகலமாக நடைபெற்றது. இதனை காண ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இந்தத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை மாலை 6 மணியளவில் மலையில் உள்ள உச்சி பிள்ளையார் கோவில் வளாகத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படுகிறது.

இந்த விழாவிற்காக 4 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட புதிய தாமிர கொப்பரை, 5 கிலோ கற்பூரம், 350 லிட்டர் நெய், 100 மீட்டர் காடா துணியிலான திரி உள்ளிட்டவை தயார்படுத்தப்பட்டுள்ளது. கோவிலுக்குள் பெரிய மணி அடித்ததும் பால தீபம் ஏற்றப்படும். இதே நேரத்தில் கோவில் மணியின் ஓசை கேட்டதும் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. -போட்டோ கார்த்தி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!