மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே ஏழை எளியோகளுக்கு உணவு வழங்க அரிசி மூடைகளை வழங்கி, சமூக சேவை அமைப்புகளுகளின் கரங்களை வலுசேர்க்கும் விஜய் மக்கள இயக்கம்
கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலைப் பரவி வரும் வேளையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மருந்து, பால், மளிகை சாமான், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களள் விற்பனை செய்ய காலை 6 மணி முதல் 10 மணி வரை செயல்பட அனுமதி அளித்து நடைமுறையில் இருந்ததை அடுத்து தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் வரும் மே 24ஆம் தேதி முதல் ஒரு வார காலம் வரை தளர்வற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு மதுரை மாவட்டத்திலுள்ள வீடற்றவர்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும், உடல் நலிவடைந்தவர்களுக்கு பல தன்னார்வலர்கள் மற்றும் அறக்கட்டளை அமைப்புகள் மூலம் உணவுகள் மற்றும் தண்ணீர் வழங்கி ஏழை எளியோருக்கு பசியையும், தாகத்தையும் போக்கி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள திருநகர் பக்கம், ரேவதி அறகட்டளை, நீயூ கிரீன் வே மற்றும் அறம் அறக்கட்டளை ஆகியோர் இப்பகுதியில் உள்ள 1000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களின வழிகாட்டுதலின்படி மதுரை புறநகர் தெற்கு மாவட்டத் தொண்டரணி தலைவர் திருநகர் மருதுபாண்டியன் அவர்களின் தலைமையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் மேற்கண்ட சமூக சேவை அமைப்புகளோடு இணைந்து உணவுகளை தயார் செய்து வழங்க அரிசி மூடைகளை வழங்கி சமூக சேவை அமைப்புகளின் கரங்களை மேலும் வலுப்படுத்தி வருகின்றனர். இச்செயல் சமூக அமைப்பினர் மற்றும் விஜய் ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப்பெற்று வருகிறது.