
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து… சென்னை மெரினாவில் போராட்ட எச்சரிக்கை! அலாட்டாகும் காவல்துறை
மணிப்பூா் சம்பவத்தைக் கண்டித்து மெரீனாவில் போராட்டம் நடத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்ததால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதில் 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.
இந்த நிலையில் இரு பெண்கள் வன்முறை கும்பலால் நிா்வாணமாக அழைத்து செல்லப்பட்டது, அதில் ஒரு பெண் வன்முறை கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது தொடா்பான விடியோ சில நாள்களுக்கு முன்பு வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினா் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.
இந்தச் சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படுகிறது.
இதற்கிடையே மெரீனாவிலும் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெற இருப்பதாக தமிழக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது.
உளவுத் துறையின் எச்சரிக்கையின் விளைவாக, மெரீனாவில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரீனா கலங்கரை விளக்கம் முதல் நேப்பியா் பாலம் வரை அதிக அளவில் போலீஸாா் நிறுத்தப்பட்டுள்ளனா்.
அந்தப் பகுதியில் போலீஸாா் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.