மதுரை மண்ணை விட்டு திரும்பிப் போ…கருப்புக் கொடி காட்டிய விவசாயிகள்!
டெல்லியில் போராடும் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்வதை கண்டித்து மதுரை வரும் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டிய விவசாய சங்கத்தினர் கைது.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மற்றும் SKM (NP) அமைப்பின் சார்பில் டெல்லியில் போராடும் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்வதை கண்டித்தும்,குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய நிரந்தர சட்டம் கொண்டு வரவும்.எம் எஸ் சாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றிடவும், கடன் முழுவையும் தள்ளுபடி செய்திடவும்,
விவசாயிகள் போராட்டத்தில் பிரதமர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும் வலியுறுத்தி மதுரை வரும் பிரதமர் மோடி அவர்களுக்கு கருப்பு கொடி காட்டி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்புவிவசாய பொருள்களுக்கு உரிய விலை வழங்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்ற விவசாய சங்க பிரதிநிதிகள் 10 பேர் கைது.
செய்தியாளர் வி காளமேகம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.