
தமிழ்நாட்டில் பல்வேறு ஆன்மீக சடங்குகளில் மட்டுமல்லாது, நோய்தீர்க்கும் மூலிகையாகவும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது வேம்பு. எப்பொழுதும் அதன் மகிமை குறையாமல் அதன் பணிகளை மேற்கொண்டுவரும் வேம்பில் பால் சுரப்பதால் மக்கள் தெய்வ சக்தி என்று வழிபடுவது இன்றைக்கும் உள்ளது. விஞ்ஞான வளர்ச்சி பெற்ற நாட்டில் வேப்பமரத்தில் பால் வடிவதை கண்டதும் மக்கள் அதற்கு சந்தனம், குங்குமம் வைத்து வழிபடுவது வாடிக்கையாகி விட்டது. பால் வடிவதை கண்ட மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்ததோடு , பெண்கள் குலவையிட்டு, வேம்பிற்கு குங்கும் வைத்து வழிபாடு நடத்துவதும் உண்டு.
இதே போன்று கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பூசலாபுரம் கிராமம் சின்னக் கருப்பசாமி கோவில் வேப்ப மரத்தில் பால் வடிந்துள்ளது. இதனை மக்கள் ஆச்சரியத்தோடு பார்த்தனர். அரிய நிகழ்வு என தங்களது செல்போன்களில் போட்டோக்களையும் எடுத்துக்கொண்டனர்.
“ஏன் வேப்பமரத்தில் பால் வடிகிறது”?
வேப்ப மரம் தாவரவகையைச் சேர்ந்தது. வேப்பமரங்கள் சிலவற்றில் திடீரென பால்போன்ற நீர் சுரக்கும் போது அம்மனின் மகிமை என்று கூறி சூடம் ஏற்றி வழிபடுவ நாம் பார்க்கமுடியும். இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். இயல்பாகவே வேப்பமரத்தில் உள்ள மாவுச்சத்தை ( அறிவியலில் – ஸ்டார்ச்சை) வேப்பமர இலைகள் சர்க்கரையாக மாற்றும் தன்மை கொண்டது. வேம்பிற்கு அருகில் நீர்ப்பகுதி அதிகமாக இருக்கும் பட்சத்தில் , மரத்திலுள்ள தண்ணீரின் அளவு அதிகமாகி வேப்பமரப்பட்டையின் அடியிலுள்ள திசு பாதிக்கப்படும். அப்பொழுது மரத்தி.லுள்ள மாவுச்சத்து பட்டையின் வழியே இனிப்பு சுவையுடன் பால் போன்று திரவம் வடிகிறது. மரத்திலுள்ள தண்ணீரின் அளவு குறையும்போது, பாதிக்கப்பட்ட திசு வளர்ந்து ஓட்டை அடைபட்டு, பால் வடிவது நின்று போகும். என அறிவியல் ரீதியாக குறிப்பிடுகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.