
உதயநிதியை செருப்பால் அடித்தால் ரூ10 லட்சம் பரிசு… ஆந்திராவில் பரபரப்பு..
சனாதனத்தை ஒழிப்போம் என சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் தமிழ்நாடு அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்பேசினார் . அவரது இந்த பேச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சை, விவாதங்களை உருவாக்கியது.மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று கூடி இது தொடர்பாக விவாதித்தது.
அப்போது, சனாதனம் குறித்த விமர்சனங்களுக்கு பதிலடி தர வேண்டும் என பிரதமர் மோடி சக அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனிடையே உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்த அகோரி சாமியார் ஒருவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டி சீவினால் ரூ10 கோடி பரிசு தரப்படும் என அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் தற்போது ஆந்திர மாநிலம் விஜயவாடைச் சேர்ந்த “Jana Jagarana Samiti” என்ற இந்துத்துவா அமைப்பு ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் சனாதனத்தை ஒழிப்போம் என பேசிய தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி கன்னத்தில் செருப்பால் ரூ10 லட்சம் பரிசு தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உதயநிதி ஸ்டாலின் படத்தையும் அவர் முகத்தில் காலணியால் அறைவது போன்ற படத்தையும் போட்டு விஜயவாடா தெருக்களில் அந்த கும்பல் போஸ்டர்களையும் ஒட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.