பிரியா கில்
மாடல் அழகியாக களமிறங்கி பின் 1996ம் ஆண்டு வெளியான தேரி மேரா சப்னா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை பிரியா கில்.
அதன்பிறகு சில ஹிந்தி படங்கள் நடித்து வந்தவர் 2002ம் ஆண்டு தமிழில் அஜித் நடித்த ரெட் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். ஆனால் இந்த படம் படு தோல்வியடைய தமிழ் பக்கம் அவர் அதன்பிறகு வரவில்லை.
தமிழில் ஒரே ஒரு படம் நடித்தவர் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.
கடைசியாக இவரது நடிப்பில் 2006ம் ஆண்டு பைரவி என்ற படம் வெளியாகி இருந்தது.
அதன்பிறகு சுத்தமாக இவரை சினிமா பக்கமே காணவில்லை.

திருமணம்
இவர் 2015ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு டென்மார்க்கில் செட்டில் ஆகிவிட்டார்.
தற்போது இவர் ஒரு மாடலிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறாராம்.
நடிகை பிரியா கில்லின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாக அட ரெட் பட நாயகியா இவர் என ரசிகர்கள் லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.