சாதிக் கலவரத்தை தூண்டும் ஜெய்பீம்…..குமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தை இழிவு படுத்தும் விதமாக காட்சி அமைக்கப் பட்டுள்ளதை கண்டித்து அதன் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் ராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாமக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

ஜெய்பீம் என்ற திரைப்படத்தில் வன்னியர்களின் புனித சின்னமான அக்னி கலசத்தை தினசரி காலண்டரில் காண்பித்து உள்ளனர். அதை படத்தில் இன்ஸ்பெக்டராக வருபவரின் வீட்டில் மாட்டி வைத்து அவர் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என காண்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வன்னியர் சங்க தலைவர் ஜெ. குருவின் பெயரை இன்ஸ்பெக்டருக்கு குருமூர்த்தி என்று வைத்த களங்கம் ஏற்படுத்தி உள்ளனர். இது வன்னியர் சமூகத்தை இழிவு படுத்துவதாகவும், ஜாதி கலவரத்தை தூண்டும் வகையிலும் அமைந்துள்ளது. 

எனவே ஜெய்பீம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் ராவ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குமரி மாவட்ட ஆட்சியரிடம் பாமக  மாநில துணை பொதுச் செயலாளர் ஹில்மன் புரூஸ் எட்வின் தலைமையில் மனு கொடுத்தனர். உடன் மாநில துணை தலைவர் ஐசியாஸ் மிசா, மாவட்ட தலைவர் ரமேஷ், மாநில இளைஞர் சங்க செயலாளர் வேல்ராஜ் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் ஞானராஜ் மற்றும் பலர் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!