சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

தூத்துக்குடி சனி பிரதோஷத்தை முன்னிட்டு சங்கர ராமேஸ்வரர் பாகம்பிரியாள் உடனுறை ஆலயத்தில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு தீபாராதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பு வாய்ந்ததாகும் அதுவும் ஆனி மாத பிரதோஷ தினமான இன்று சனி பிரதோஷமாக வருவதால் இன்று சிவாலயம் சென்று வழிபட்டால் அனைத்து பலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்சனி பிரதோஷத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பழமையான சங்கர ராமேஸ்வரர் உடனுறை பாகம்பிரியாள் ஆலயத்தில் சுவாமி மற்றும் நந்தி பகவானுக்கு பால் தயிர் நறுமண பொருட்கள் இளநீர் தேன் விபூதி சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றதுசனி பிரதோஷத்தை முன்னிட்டு ஆலய வளாகத்தில் நடைபெற்ற சுவாமிகிரிவலம் வரும் நிகழ்ச்சியில் சுவாமி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கிரிவலம் பாதையில் வலம் வந்தனர்.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிவாய நமக சிவாய நமக என்ற பக்தி கோசத்தை எழுப்பியதுடன் நந்தி பகவான் மற்றும் சிவபெருமானை வழிபட்டு சென்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!