விக்கிரமங்கலம் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் பெண்ணை தாக்கும் வீடியோ வைரல்

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே வடகாடு பட்டியில் மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் தாராளமாக கிடைப்பதால் அதனை அருந்தும் இளைஞர்கள் அந்தப் பகுதியில் வருவோர் போவோரை கத்தி கட்டை கம்பியால் தாக்கி வருகின்றனர்.

மேலும் தகாத வார்த்தைகளால் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட கஞ்சா போதை பொருட்கள் சில இளைஞர்கள் மூலமாக அனைவருக்கும் சர்வசாதார்ணமாக கிடைத்து வருகின்றது. இதனால் அப்பகுதி இளைஞர்கள் சீர்கெட்டு வருகின்றனர். இதனால் காடுப்பட்டி விக்கிரமங்கலம் மக்கள் எப்போதும் பீதியில் இருந்து வருகின்றனர் இது போன்ற சம்பவங்கள் நீடித்தால் பல இளைஞர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகவும், உயிர் பலிகள் கூட ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர் மேலும் போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக விசாரணை செய்து விக்கிரமங்கலம் காடுபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கஞ்சா போதை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர் நேற்று இரவு போதையில் இளைஞர்கள் பெண்ணை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வருகிறது.

தாக்குதலுக்கு ஆளான பெண் படுகாயத்துடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகையால் மாவட்ட எஸ்பி தீவிர விசாரணையில் ஈடுபட்டு போதை வஸ்துகளை தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை

மாவட்டம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!