மதுரையில் த.வெ.க பிரமுகர் குவாரிக்கு 7.48 கோடி அபராதம்; வருவாய் கோட்டாட்சியர் அதிரடி உத்தரவு.!

மதுரையில் த.வெ.க பிரமுகர் குவாரிக்கு 7.48 கோடி அபராதம்; வருவாய் கோட்டாட்சியர் அதிரடி உத்தரவு.!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் அடுத்த கருவேலம்பட்டியில் பட்டா நிலத்தில் முருகேசன் என்பவர் குவாரி நடத்த கடந்த 2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகள் குவாரி நடத்த அனுமதி பெற்றனர்.

பின்னர் அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக கற்கள் மற்றும் கிராவல் மண்ணை தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பாரி மற்றும் முருகேசன் ஆகியோர் கனி வளத்துறையினர் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக சட்ட விரோதமாக குவாரியில் கற்களை வெட்டியெடுத்தனர்.

இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக இயங்கி வரும் கல்குவாரியை மூடச்சொல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற உத்தரவை மதிக்காக கல்குவாரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கருவேலம்பட்டி சரவணக்குமார் தொடர்ந்தார். இதையடுத்து இந்த வழக்கை வழக்கறிஞர் ஜெயக்குமார் தொடர்ந்து எடுத்து நடத்தியதின் பேரின் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் நிலையூர் அடுத்த கருவேலம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக 54,084.02 கன மீட்டர் கற்கள் மற்றும் 23,689.42 கன மீட்டர் கிராவல் மண்ணை வெட்டி கடத்தி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய தமிழக வெற்றிக்கழகத்தைச் சேர்ந்த பாரி மற்றும் முருகேசன் ஆகிய இருவருக்கும் 7.5 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளார்.

திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த தவெகா பிரமுகர் பாரி முன்பு அதிமுகவில் இருந்தார் தாவீகா வெற்றி பெற்றதும் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் பாரி
த.வெ.கவில் இணைந்தனர். ருபாய் 7.5 கோடி அபராத தொகையை கனிம வளத்துறையின் வங்கி கணக்கில் செலுத்தவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!