திருக்குறள் கூறினால் பெட்ரோல் பரிசு – பாராட்டிய சீமான்.

கரூர் அருகே நாகம்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள வள்ளுவர் எரிதிரவக்கிடங்கில், 20 குறள்களைக் கூறினால் மாணவர்களுக்கு எரிதிரவம் (பெட்ரோல்) பரிசாக வழங்கப்படும் என அதன் உரிமையாளர் ஐயா செங்குட்டுவன் அறிவித்திருக்கிற செய்தியறிந்து பெரிதும் மகிழ்வுற்றேன்.

வணிகத்தில் இலாபமீட்டுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாது தமிழுக்குத் தொண்டாற்றுவதையும், உலகப்பொது மறையாம் திருக்குறளின் மேன்மையை நாளைய தலைமுறைக்கு எடுத்துரைப்பதையும் நோக்கமாகக் கொண்டு பெரும்பணியாற்றி வரும் வள்ளுவர் எரிதிரவக்கிடங்கின் உரிமையாளர் ஐயா செங்குட்டுவன் அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவிக்கிறேன். என தனது டிவிட்டர் பக்கத்தில் நாம் தமிழர் கட்சி சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர்
பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

error: Content is protected !!