விக்டோரியா எட்வர்ட் மன்றம்மதுரை மக்களின் சொத்து!மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு..

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை கடந்து மதுரை தொடர்வண்டி நிலையம் போகிற வழியில் சங்கீத் உணவகம் தொடங்கி தங்கரீகல் திரையரங்கம் வரை நீண்டு அமைந்துள்ள கடைகளோடு அதன் மையத்திலே விக்டோரியா எட்வர்ட் மன்றம் என்ற பெயரைத் தாங்கிய வளாகமும் அமைந்த பகுதி பிரிட்டிஷ் அரசால் விக்டோரியா எட்வர்ட் ஹால் சங்கத்திற்கு நகரின் மையத்தில் நூலகம் , அருங்காட்சியகம், நகர் மன்றம் (டவுன்ஹால்) ஆகியவற்றை பராமரிப்பதற்காக நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டது.

மேற்சொன்ன நோக்கத்தை மீறினால் அந்த இடம் முழுவதையும் அரசு திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நிபந்தனையை உள்ளடக்கி 1911 சனவரி 27 ல் அன்றைய மாவட்ட நிர்வாகம் விக்டோரியா எட்வர்டு ஹால் சங்கத்திற்கு வழங்கப்பட்டது.

கடந்த பல ஆண்டுகளாக விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் இயங்கிய அருங்காட்சியகம் காணாமல் போய்விட்டது. 24.6.2002 சங்கப் பொதுக்குழுவில் அருங்காட்சியகம் விக்டோரிய எட்வர்டு ஹால் சங்கத்தின் விதிகளிலிருந்து (bylaw) பிரிட்டீஷ் அரசு ஆணை 254 /1911 மீறி சட்டப்புறம்பாக நீக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இயங்கிய நூலகமும் செயல்படவில்லை. டவுன்ஹால் தங்கரீகல் திரையரங்கமாக மாறியுள்ளது. மேலும் சங்கத்திற்கு சொந்தமான வணிகவளாகக் கட்டிடங்களில் இருந்து வரும் வாடகையில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக சான்றுகளுடன் சங்க உறுப்பினர்கள் கேள்வி கேட்டவுடன் த‌ற்போதைய நிர்வாகக் குழுவால் நீக்கப்பட்டுள்ளனர்.

விக்டோரிய எட்வர்டு மன்றத்தை மதுரை மக்கள் பயன்படுத்தும் நோக்கில் விக்டோரிய எட்வர்டு மன்றம் மீட்பு இயக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக போராடி வருகிறது.

துணைவிதிகள் திருத்தம் , வாக்காளர் பட்டியலில் முறைகேடு , ஊழல் ஆகியவற்றில் திளைக்கும் தம்பியையும் நிர்வாகத்தின் மீது தமிழ்நாடு சங்கப் பதிவு சட்டம் பிரிவு 36ன் படி மாவட்ட ஆட்சியர் சட்டபூர்வ விசாரணை நடத்தக் கோரி விக்டோரியா எட்வர்ட் மன்றம் மீட்பு இயக்கத்தோடு பல்வேறு சனநாயக இயக்கங்கள் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

Leave a Reply

error: Content is protected !!