மதுரை: விளாச்சேரியில் விற்பனையாகாத தீப விளக்குகள்: உற்பத்தியாளர்கள் கவலை.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரி கிராமம் உள்ளது. இங்கு
300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கார்த்திகை தீப விளக்குகள், கொழுபொம்மைகள், விநாயகர் சிலைகள், கிறிஸ்துமஸ் பொம்மைகள் ஆகியவை தயாரித்து வருகின்றனர்.

தற்பொழுது கார்த்திகை மாதத்தை முன்னிட்டு அகல் விளக்குகள் மற்றும் பெரிய தீப விளக்குகளையும் தயாரித்து வருகின்றனர்.

சிறிய அகல்விளக்கு ஒரு ரூபாய் முதல் அலங்கார அகல் விளக்குகள் 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

கொரோனா காலத்தில் இருந்து தற்போது வரை விற்பனையாகாமல் பொருட்கள் தேங்கி உள்ளதால் சிறு மற்றும் குறு தொழில் செய்யும் வியாபாரிகள் 4 லட்சம் முதல் 5 லட்சம் வரை நஷ்டம் அடைந்ததாக தெரிவிக்கின்றனர்.

மேலும் புதிதாக தயாரிக்கப்பட்ட லட்சுமி அகல்விளக்கு, விநாயகர் அகல் விளக்கு, 5 தீபம் ஆகியவை தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளனர்.

தற்போது கொரோனா காலம் என்பதால் விற்பனை சரியாக நடைபெறவில்லை என விளாச்சேரி உற்பத்தியாளர்கள் கவலை அடைந்து வருகின்றனர்.

Leave a Reply

error: Content is protected !!