கந்த சஷ்டி நிகழ்வில், கொரோனா தொற்று காரணமாக கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் அறிவிப்பு
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு முருகன் கோவிலில், ஒவ்வொரு வருடமும் கந்தசஷ்டி உற்சவ திருவிழா வெகு விமர்சியாக நடைபெறும்.
இந்நிலையில், இந்த வருடத்திற்கான கந்தசஷ்டி திருவிழா கடந்த 15ம் தேதி முதல் சுவாமிக்கு காப்புக்கட்டுதல், வேல்வாங்குதல், சூரசம்ஹாரம் மற்றும் பாவாடை கட்டுதல் ஆகிய திருவிழாக்கள் முறையே நவம்பர் மாதம் 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஆகிய ஏழு நாட்கள் வெகு விமர்சியாக நடைபெற்று வருகின்ற நிலையில், கந்தசஷ்டி திருவிழாவில் சூரசம்ஹாரம் நிகழ்வானது முக்கியமான ஒன்றாகும்.
இந்நிலையில், நேற்று கோவர்தனம்பிகையிடம் வேல் வாங்கும் நிகழ்வும் இன்று
மாலை சூரசம்ஹாரம் நிகழ்வு நிகழ்வு திருவாச்சி மண்டபத்தில் நடைபெறுகிறது
இந் நிகழ்ச்சியில் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சூரசம்ஹார நிகழ்விற்கு முன்பாக, காலை 5.30 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு பகல் 12.30 மணியளவில் கோவில் நடை சாத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு ஆரம்பிக்கும் சூரசம்ஹாரம் நிகழ்வானது 5.30 மணி வரை திருக்கோவில் வளாகத்தில் நடைபெறும் என்றும், பின்னர் 6.30 மணியளவில் சாமி சேர்த்தல் நிகழ்வு நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மாலை நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்வில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
மாட்டார்கள் என்றும், மேலும் சூரசம்ஹாரம் நிகழ்வு முடிந்த பின்னர் 6.30 மணிக்கு மேல் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வு பார்க்கமுடியாமல் வேதனையுடன் பக்தர்கள் கோவில் வாசலில் குவிந்தனர்.
பக்தர்கள் சூரசம்ஹார நிகழ்ச்சியை காண எல்.இ.டி.டிவி வசதி ஏற்படுத்தவில்லை என புகார் .
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது .
இதில் கொரான தொற்று பரவும் என்ற அச்சுறுத்தல் காரணமாக கோவில் நிர்வாகம் உபயதாரர்கள், கோயில் கட்டளையாளர்கள் மற்றும் பக்தர்களை அனுமதிக்கவில்லை.
வருடம் வருடம் நடைபெறும் சூரசம்கார நிகழ்வை காண திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் முன் திரளுவர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வாசலில் திரண்டனர்.
ஆனால் கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டதால் கோவில் வாசலில் வேதனையுடன் காத்திருந்தனர் மேலும் உள் விழா விழாவாக நடக்கும் சூரசம்காரம் எல்இடி டிவி மூலம் வெளியில் வைத்திருந்தால் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும் எனவும் கொரான தொற்று பரவும் என்ற சூழ்நிலையை காரணம் கூறிய கோயில் நிர்வாகம்.
கோவில் வாசலில் திண்ட பொதுமக்கள் வரிசையை ஒழுங்கு படுத்தவும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் எதுவுமே செய்யாததால் பக்தர்கள் வேதனை அடைந்தனர் .