மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் போட்டி.

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மதுரை சிம்மக்கல் கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவிகளுக்கு திருக்குறள் போட்டி நடத்தப்பட்டது.

அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தலைமை வகித்து பேசுகையில்-
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் மாணவ மாணவிகள் நடத்திய மொழி போராட்டத்தின் நினைவாகவே உலக தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலகின் அனைத்து மொழிகளும் சிறந்தவைதான்.

ஒவ்வொரு மனிதனும் தன் தாய்மொழியில் சிறந்து விளங்கி அதன் மூலமாக பல்வேறு மொழிகளை கற்று தானும் முன்னேறி மற்றவர்கள் முன்னேற வழிகாட்ட வேண்டும்.

நம் தாய்மொழியான தமிழில் நமக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமைகளில் முக்கிமானது உலக அறிஞர்களால் உலக பொதுமறையாக போற்றப்படும் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் தான்.

இதை அனைத்து மனிதர்களும் அதிலும் குறிப்பாக மாணவ மாணவிகள் அறிந்து அதன் நெறிப்படி வாழ்ந்தால் நாம் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்.

அதை முன்னெடுக்கும் வகையிலேயே வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை இந்த திருக்குறள் போட்டியை நடத்தி பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்குகிறோம் என்றார்.

நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகேஸ்வரி முன்னிலை வகித்து வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை பள்ளிக்கு வழங்கிவரும் ஒத்துழைப்பை பாராட்டினார்.

போட்டி நடுவராக கவிக்குயில் கணேசன் கலந்துகொண்டு மாணவிகளை தயக்கமின்றி பேச ஊக்கப்படுத்தியதோடு பரிசுக்குறிய மாணவிகளையும் தேர்வு செய்தார்.

சிறப்பு விருந்தினராக மருதாணி மாத இதழ் ஆசிரியர் தியாகசீலன் கலந்துகொண்டு மாணவிகளையும் வழிகாட்டி மணிகண்டனையும் வாழ்த்தி பேசினார்.

தமிழாசிரியை ஆனந்தி மாணவிகளிடம் போட்டிக்கான ஆலோசனைகளை வழங்கி நிகழ்சியை ஒருங்கிணைத்தார்.

விழா களப்பணிகளை புத்தக தான வங்கி அமைப்பாளர் அசோக்குமார் செய்தார்.

திருக்குறள் போட்டி முடிவில் மாணவிகளுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவிகள், சமூக ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

error: Content is protected !!